மட்டக்களப்பின் அபிவிருத்தி குறித்து மாவட்ட அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவர் கூறியுள்ள விடயம்
ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை போல வேறுபாடு இன்றி மட்டக்களப்பிலும் எனது காலத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன் என அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவிற்கு புதிதாக தலைமைப் பதவியைப் பொறுபபெற்றுள்ள சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
குழுக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (11.06.2025) பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் கிழக்கு மாகாண மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனாதிபதியின் இந்த நியமனம் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
கட்டியெழுப்ப வேண்டிய தேவை
கடந்த காலத்தில் நானும், ஆளுநரும் மாவட்டத்தில் தனியாக தேர்தல் கால சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். இன்று மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருப்பது நினைத்து பெருமை அடைகிறேன்.

இங்கு சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி, என்பனவற்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை உள்ளது என அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan