மட்டக்களப்பில் கோவிட் உயிரிழப்புகள் அதிகரிப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
போதனா வைத்தியசாலையின் கோவிட் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெரியபோரதீவு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மாவட்டத்தில் மூன்றாவது கோவிட் அலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 26 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.