மட்டக்களப்பில் நடைபெற்ற களுதாவளை கிரிக்கெட் சுற்றுப்போட்டி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிறிமியன் லீக் (கே.பி.எல்) கிரிக்கெட் சுற்றுப்போட்டி களுதாவளை பொது மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.சர்ஜின் தலைமையில் நேற்று (26) நடைபெற்றுள்ளது.
இந்தப் போட்டி களுதாவளையிலுள்ள சிரேஷ்ட வீரர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும், கனிஷ்ட
வீரர்களுக்கிடையில் மற்றுமொரு போட்டியாகவும் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இறுதியில் களுதாவளையிலுள்ள சிரேஷ்ட வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் களுதாவளை ரைக்கஸ் அணியும் களுதாவளை சுப்பர் கெயின்ஸ் அணியும் விளையாடியதில் களுதாவளை ரைக்கர் வெற்றி பெற்றது.
கனிஷ்ட வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் களுதாவளை கிங்ஸ் அணியும், களுதாவளை ஸ்பைக்ஸ் அணியும் விளையாடியதில் களுதாவளை கிங்ஸ் வெற்றி பெற்றது.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கிராம பெரியோர்கள், பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், இராஜாங்க அமைச்சரின் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிய விளையாட்டரங்கு அமைப்பதற்குரிய அடிக்கலும் வைக்கப்பட்டது.