மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதான வீதியில் விபத்து: ஐவர் படுகாயம்(Video)
மட்டக்களப்பு - கிரான்குளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இன்று(4) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் கிராமத்திலிருந்து குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம்(3)திருகோணமலைக்குச் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கிரான்குளம் பிரதான வீதியில் வைத்து அதிகாலை வேளையில் வேன் பாதையை விட்டு விலகி இலங்கை மின்சாரசபை மின்கம்பத்தில் மோதுண்டு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வேன் மற்றும் மின்கம்பம்
சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள்.



ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam