வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேகநபரான குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - ஊறணி, மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சின்ன ஊறணியை சேர்ந்த 35 வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் என்பவரே உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan