மட்டக்களப்பு நீதிமன்றிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு(Video)
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் வாகன களஞ்சியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து இன்று(11.08.2023) 3 மாத்தின் பின்னர் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுணதீலு பிரதேசத்தில் கடந்த வருடம் சட்டவிரேதமாக மோட்டர் சைக்கிளில் சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை மோட்டர் சைக்கிளுடன் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
மீட்க்கப்பட்ட மோட்டார் சைக்கில்
இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மோட்டர் சைக்கிளை அரச உடமையாக்கி பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள களஞ்சியசாலை பகுதியில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 4ம் திகதிக்கும் 8ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மோட்டர்சைக்கிள் திருட்டுபோயுள்ளதாக 8ம் திகதி நீதிமன்ற பதிவாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பி.ஆர். பண்டாரவின் நெறிப்படுத்தலில் குறித்த வாவியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
