மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து.. ஒருவர் பலி
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (08.10.2025) காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற காரின் சாரதி தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி வீதியோரமாக பயணித்தவர் மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இவ்விடயம் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் ஓட்டமாவடி-01, பதியுதீன் மஹ்மூத் வீதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனி முகம்மது முகம்மது இப்றாஹீம் (வயது - 63) என்பவர் மரணமடைந்துள்ளார்.
வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




