பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video)

Batticaloa Sri Lanka Accident
By Kumar Jul 10, 2023 01:50 AM GMT
Report

புதிய இணைப்பு

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாம் இணைப்பு

பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video) | Batticaloa Bus Accident

பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video) | Batticaloa Bus Accident

பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video) | Batticaloa Bus Accident

இரண்டாம் இணைப்பு

பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மனம்பிடிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video) | Batticaloa Bus Accident

பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (video) | Batticaloa Bus Accident

முதலாம் இணைப்பு

பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு (09.07.2023) இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US