மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை (21) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இவரைக் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதவான்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 3 ம் திகதி வரை 14 நாட்களுக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan