மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பள்ளத்தில் விழுந்த கார் விபத்து
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார், இன்று (14.10.2025) காலை குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில், அவர்கள் காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்
இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் உயர்சேதம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
