மட்டக்களப்பில் கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில் (Photos)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்றைய தினம் (14.07.2023) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலும் குறிப்பிடுகையில் கம்பஹாவிலிருந்து காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென குறுக்கீடு செய்து வீதியைக் கடக்க முயன்ற மோட்டார் வண்டியில் மோதுவதைத் தவிர்ப்பதற்கு முற்பட்டபோதே கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கார் எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது மோதியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உட்பட காரில் பயணித்தவர்களும் உள்ளடங்களாக 4 பேர் பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


