தென்னிலங்கைப் பக்கம் நகரும் சீனா: தமிழர் பகுதியில் நிலை கொள்ளுமா இந்தியா- ஞா.ஸ்ரீநேசன்

Batticaloa Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lanka India
By Kumar Aug 21, 2022 07:18 AM GMT
Report

தென்னிலங்கைப் பக்கம் சீனா நகர்கின்ற போது இந்தியாவின் தேவைக்காகவும், ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் வடக்கு, கிழக்கில் இந்தியா நிலை கொள்ள வேண்டிய நிலையேற்படலாம் என மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்து சாதாரண பிரஜையாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களை விசாரணை செய்யும்படி பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் விடுக்கப்படலாம். எனவேதான் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற உறுப்பினராக மாறவேண்டிய தேவையுள்ளது.

தென்னிலங்கைப் பக்கம் நகரும் சீனா: தமிழர் பகுதியில் நிலை கொள்ளுமா இந்தியா- ஞா.ஸ்ரீநேசன் | Batticalo North East Sri Lanka India

மேலைநாட்டு ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் ஓய்வு பெற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெதிராகக் குற்றச்சாட்டுக்கள் வருவது குறைவு என்ற நிலை காணப்படுகிறது.

பதவி அதிகாரம்

ஆனால் தெற்காசியாவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரம் என்பது அவர்களுக்கு பரிகாரமானதொன்றாக இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் கடந்தகாலத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கை வந்து பதவியைப் பெறும் போது போராட்டக்காரர்கள் எவ்வாறு அதனைப பார்க்கப் போகிறார்கள் என்ற விடயமும் உள்ளது. அவர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

காய்நகர்த்திக்கொண்டிருக்கும் சீனா

அத்தோடு சீனா மிகவும் இராஜதந்திர ரீதியாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இக்காய் நகர்த்தல் சீனாவுக்கு இந்து சமுத்திரத்தில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்திற்குப் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி, விடுதலைப் புலிகளை அழிக்க அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் இந்து சமுத்திரத்தில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு கிடைத்திருக்கின்றது.

தென்னிலங்கைப் பக்கம் நகரும் சீனா: தமிழர் பகுதியில் நிலை கொள்ளுமா இந்தியா- ஞா.ஸ்ரீநேசன் | Batticalo North East Sri Lanka India

அதை விட இன்னொறு விடயத்தையும் சீனா செய்திருக்கிறது. அதாவது சாத்தியவள ஆய்வில்லாமலேயே பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி செய்திருக்கின்றது.

இந்த வகையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குப் 10000 கோடி ரூபா கொடுத்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. மத்தள விமான நிலையமும் இதில் உள்ளடங்குகிறது.

இவ்வாறு வருமானம் ஈட்ட முடியாத அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா உதவி புரிந்திருக்கின்றது. அதனை மறுபக்கமாகப் பார்ப்போமானால் ராஜபக்ச குடும்பத்தினர் தமது மாவட்டம் சார்ந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமை கண்கூடு. இந்த நிலையில் கடன் பெற வேண்டிய தேவையேற்பட்டது.

கடன் பெறுவதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 99 வருடம் எனக் கூறுகையில் அது பல தலைமுறையினர் வாழும் காலமாக வரையறுக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு தற்போது சீனாவின் உளவுக் கப்பல் வந்திருக்கின்றது. இதன் அடுத்த கட்டமாக சீனாவின் ராணுவம் கூட இங்கு வரும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு ஒரு பலத்த தலையடி, சங்கடம் உருவாகியிருக்கின்றது.

தென்னிலங்கைப் பக்கம் நகரும் சீனா: தமிழர் பகுதியில் நிலை கொள்ளுமா இந்தியா- ஞா.ஸ்ரீநேசன் | Batticalo North East Sri Lanka India

இந்நிலையில் இந்தியா ஓர் உளவு விமானத்தை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அந்த உளவு விமானம் இந்தியாவுக்குத் தேவையான உளவு செய்தியை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறான நிலையில் அமைதியாக இருந்த இந்து சமுத்திரப் பிராந்தியம் இப்போது சிக்கலான களமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆகவே அணிசேராக் கொள்கையினைப் பின்பற்றும் அரசாக இலங்கை தன்னைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. நாம் எந்த வல்லரசையும் சாராது.

இப்போது பார்க்கப் போனால் தங்களுடைய அபிவிருத்தி என்ற மாயைக்கும், அவ் அபிவிருத்திக்கூடாகக் கிடைக்கும் கொமிசன் என்ற தேவைக்குமாகத் தற்போது பெருந்தொகைக் கடன்பட்டதன் காரணமாக முதலில் உளவுக் கப்பல் வந்திருக்கின்றது.

சிலவேளைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முறுகல் நிலையேற்பட்டு, சீனா தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக தனது படைகளைக் கூட, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கொண்டு வரக் கூடிய நிலையும் ஏற்படலாம்.

இந்தியாவின் பாதுகாப்பு

இந்த நிலையில்தான் இந்தியா இப்போது சிந்திக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது. தங்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பாதுகாப்பாகப் போராட்டக்களத்தில் இருந்தவர்களை இந்தியாவும் தேர்ந்து, இலங்கைக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, அந்தப் போராட்டத்தை மௌனிக்கச் செய்தது.

இதன் காரணமாக இப்போது இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கியுள்ளது. தென்னிலங்கைப் பக்கம் சீனா நகர்கின்ற போது, இந்தியாவின் தேவைக்காகவும், ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் வடக்கு, கிழக்கில் இந்தியா நிலை கொள்ள வேண்டிய நிலையேற்படலாம். 

அதுமட்டுமல்ல இந்தியா தலையிடுகின்ற போது, இந்தியாவோடு சீனா மோதுகின்ற போது, குவாட் அமைப்பு என சொல்லப்படுகின்ற ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்றவையும் இந்தியாவோடு நிற்கின்றது.

எனவே இந்த நாடுகள் இந்தியாவுக்கெதிராகப் போர் மூழுமாக இருந்தால் அல்லது ஒரு முரண்பாடு உருவாகுமாக இருந்தால் இந்த நான்கு நாடுகளும் சீனாவுக்கெதிராகச் செயற்படுகின்ற வாய்ப்பு இருக்கின்றது.

அமெரிக்காவும் கூட தற்போது இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் பல்வேறு முதலீடுகள் செய்து வருகின்ற நிலையில் யுத்தத்துக்கான தீர்வை சொந்த நாட்டவர்களோடு பேசித் தீர்க்காது, யுத்தத்தை வெல்ல பல நாடுகளோடு தொடர்புபட்ட படியால், இப்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US