கையும் களவுமாக பிடிபட்ட காணிக்கொள்ளை! பின்னணியில் இருப்பவர்கள் குறித்து சாணக்கியனின் தகவல் (Video)
எந்த சமூகமாக இருப்பினும் சட்டவிரோதமாக காணிக் கொள்ளைகளில் ஈடுபடுவது குற்றம் குற்றமே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை பிரித்து தங்கள் சுய தேவைகளை மறைமுகமாக பெறுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு - நாவலடிப் பகுதியில் (கொழும்பு வீதியில்) அத்துமீறி சட்டவிரோதமாக பிடிக்கப்படும் காணிகள் தொடர்பான விடயங்களை ஆராயவும், தடுக்கவும் இன்றைய தினம் (06.08.2023) திடீர் விஜயம் ஒன்றினை சாணக்கியன் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்டவிரோத காணிக் கொள்ளை

மேலும் தெரிவிக்கையில், நாவலடி பிரதேசத்தில் பாரியளவில் சட்டவிரோத காணிக் கொள்ளை இடம்பெறுவது கையும், களவுமாக பிடிபட்டதுடன் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. இந்த கொள்ளைகள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
எந்த சமூகத்தினர் ஆயினும் சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபடுவது குற்றம் குற்றமே. இவற்றுக்கு பின்னால் அரச சார் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தரகுப் பணத்துக்காகவும் தங்களது கட்சியின் தங்களை சார்ந்தவர்களின் சுய நலனுக்காகவும் இந்த காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து வருகின்றனர்.
வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை தங்களது சுய இலாபங்களுக்காக பிரித்து வைத்து தங்களின் சுய தேவைகளை இவர்கள் மறைமுகமாக ஒற்றுமையாக செயல்ப்பட்டு இவ்வாறான சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறான செயல்பாடுகளை தடுக்க வேண்டியவர்களே இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவது அதற்குரிய ஆதரவினை வழங்குவது அனைத்து இன மக்களின் எதிர்கால சந்ததியினரின் இருப்புக்களை கேள்விக்குறியாக்குவதற்கு சமமானதாகும்.
புளுட்டுமானோடை சட்டவிரோத காணி அபகரிப்பானது ஓர் பக்கம் பாரியளவில் நடந்து வரும் அதே வேளை அதற்கு ஈடாக இங்கும் போட்டி போட்டுக்கொண்டு இங்கும் நடந்து வருகின்றது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவற்றுக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam