மயிலத்தமடு பண்ணையாளர்களின் பாரிய போராட்டம் (Photos)

Batticaloa Sri Lanka
By Kumar Dec 23, 2023 08:04 AM GMT
Report

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

குறித்த போராட்டமானது மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அத்துமீறி குடியேறிய குடியேற்றவாசிகளிடமிருந்து மேய்ச்சல் நிலத்தை மீட்டு தருமாறு கோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது.

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பாரிய போராட்டம் (Photos) | Batticalo Farmers Protest 100 Days

இலங்கைக்கு கடத்தவிருந்த 1000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் : தமிழகத்தில் சிக்கியது

இலங்கைக்கு கடத்தவிருந்த 1000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் : தமிழகத்தில் சிக்கியது


பலதரப்பட்டோர் பங்கேற்பு

போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகள், விவசாய அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள் எனப் பல்வேறு அமைப்புக்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்.மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை முன்வைப்பு

இதன்போது மட்டக்களப்பு மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி அவற்றில் கால்நடை வளர்ப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், கால்நடைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் மகஜர் தயாரிக்கப்பட்டு அங்கு கடமையிலுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பாரிய போராட்டம் (Photos) | Batticalo Farmers Protest 100 Days

போராட்டத்தின் போது  ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது்டன் அமைதியான முறையில் போராட்டம் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US