மட்டக்களப்பில் கனியப்பொருள் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களை கோரி கண்டன பேரணி (photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனியப்பொருள் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க கோரி மாபெரும் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புவுச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் முன்பாக இன்று (28.04.2023) கண்டன பேரணியை முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
மாபெரும் கண்டன பேரணி
கனிப்பொருள் அகழ்விற்குள் இலஞ்சம் வேண்டாம், சுற்றாடல் அமைச்சரே எங்களை வாழ்விடுங்கள், எமது மாவட்டத்தில் கனிப்பொருள் அகழ்வு அனுபதிப் பத்திரங்கள் அனைத்தையும் உடன் வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களும் மட்டக்களப்பு நகர் நோக்கி ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கிவைத்தனர்.







விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
