மட்டக்களப்பில் பெண்கள் விடுதியொன்றில் 3 பேருக்கு கோவிட் தொற்று
மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவர்கள் தங்கியிருக்கும் பெண்கள் விடுதியொன்றில் 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த விடுதி இன்று வெள்ளிக்கிழமை (30) மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த மற்றைய 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
வெளி பிரதேசங்களில் இருந்து வந்து கல்வி கற்பதற்காக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் எழுமாறாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறையினருக்கு இரண்டாவது கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
