மட்டக்களப்பில் விபரீத முடிவினால் இளைஞர் பலி (PHOTOS)
அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பனங்காட்டு பாலத்திற்கு அருகில் உள்ள பூர்த்தி செய்யப்படாத தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாயுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு
நாட்களுக்கு முன்னர் வெளியேறிய இளைஞரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |