மட்டக்களப்பில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு மே மாதம் 19 ம் திகதி; 13 வயது சிறுமியை அவரது சித்தப்பாவான 35 வயதுடைய கனகரெத்தினம் ஜெயானந்தம் என்பவர் பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
12 வருட கடூழிய சிறைத் தண்டனை
இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டகோவை 354 கீழ் சிறுமியை கவர்ந்து கொண்டு சென்றது மற்றும் தண்டனை சட்டக்கோவை 364 கீழ் பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பி.தர்சிகா ஆகியோர் முன்னிரையாகியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 08-24-2026 மன்றில் இனங்காணப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 18ம் திகதி தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.
இதன் பிரகாரம் குறித்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான சிறுமியை கவர்ந்து கொண்டு சென்ற குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியமைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri