மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் கைது செய்யப்பட்ட மதகுரு வெளிப்படுத்திய தகவல்
மட்டக்களப்பு - ஓட்டமாவடி நாவலடி சந்தியில் இரண்டு ரி56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட மதகுரு விசாரணையின்போது சில தகவல்களை வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம்(30) கைது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில், தாம் கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் மதகுருவாக கடமையாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடத்தப்பட்ட விசாரணை
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததாகவும், துப்பாக்கி மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம் காரணமாக அவற்றை தாம் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.

முன்னதாக ஓட்டமாவடி நாவலடி பகுதியில் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் வழங்கிய தகவலின்படி,அதிகாரிகள் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை நடத்தினர், அங்கு மற்றொரு ரி56 துப்பாக்கி, ஒரு மெகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam