மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான களம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமோ, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமோ அல்ல என்பைதை பிரச்சினைக்குரிய மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ஈபிஆர்எல்எப்பின் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தம்
மேலும் கூறுகையில், 13வது திருத்தினை 35 வருடங்களில் பின் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழ் தலைமைகளும் இதனை நிராகரிக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் எட்டப்படாத நிலை பல வருட காலத்திற்கு ஏற்படும் என்பதனை மறந்து விடக்கூடாது.
இதில் ஏதாவது லாப நட்டங்கள் ஏற்படும் பட்சத்தில் இதை மறுக்கின்ற தமிழ் தலைமைகள் இதற்கு பொறுப்புக்கூறியாக வேண்டும். பொறுப்பெடுத்தேயாக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி குழு கூட்டம்
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்று முடிந்திருக்கின்றது.
இந்த கூட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்பட்டிருக்கின்றது. இந்த அதிருப்தியானது மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுகின்றது என்பது மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இதில் உண்மை தன்மையும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி குழு இணைத் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். துணைத்தலைவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார். பதவி ரீதியாக ஆளுநர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.
இதையொட்டி 14 பிரதேச செயலகங்களுக்குமாக பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள கேள்வி
நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் கிழக்கு மாகாண சபையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் பிரதேச செயலங்கள், திணைக்கள தலைவர்கள், அனைவரும் திட்டமிட்டவாரு பல மாதங்கள் ஆலோசனை செய்து திட்டமிட்டு அந்த கூட்டத்திற்கு வந்ததற்கான நோக்கம் மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை பேசி தீர்வு காண்பதற்கு.
திணைக்கள தலைவர்களை பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் இவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளார்கள் என்று.
இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான ஏற்பட்ட சண்டை காரணமாக ஆரோக்கியமான முறையில் இந்த அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றதா என்ற கேள்வி பொது மக்களுக்கு மத்தியில் தொக்கி நிற்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக் கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
