சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பீடி இலைகள் மீட்பு
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டு நடுக்குடா காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 1360 கிலோ பீடி இலைகள் மற்றும் 29 ஆயிரத்து 120 பீடிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
