படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
அண்மைக்காலமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாரம்மலவில் பொதுமகன் ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''அண்மைக்காலமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் குறித்து சுயாதீன விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
யுக்திய திட்டம்
அதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தற்போது மேற்கொள்ளப்படும் யுக்திய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகள், பொது நலனைப் பாதுகாப்பதில் வழக்கறிஞர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகிறது.
நீதிக் கட்டமைப்பு, தேவையான விசாரணைகள் தொடர்பில் சமநிலையை வலியுறுத்துவதோடு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் யாரும் தாக்கப்படக்கூடாது என்பதையும் அடிக்கோடிட்டு காட்டுகின்றது.
மேலும், சட்டத்தின் ஆட்சியையும் அதை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் ஏமாற்றும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாரதிகளை சீர்படுத்த முன் நவீனமயமாக்கப்பட்ட வீதிகளை அமையுங்கள்: அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |