கரப்பந்தாட்டத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் (Photos)
வரலாற்றில் முதற் தடவையாக 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டாத்தில் (volley ball) முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் மாகாண மட்ட இறுதி போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மட்டத்திற்கு தெரிவு
வற்றாப்பளை மகா வித்தியாலயம் மற்றும் கலைமகள் வித்தியாலயத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி மாகாணமட்ட இறுதிப்போட்டியில் விளையாடி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாம் இடத்தினை முள்ளியவளை வற்றாப்பளை மகாவித்தியாலய அணியும், 2ஆம் இடத்தினை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயமும் பெற்றுக் கொண்டுள்ளன.
பாராட்டு நிகழ்வு
இந்த நிலையில் வற்றாப்பளை மகாவித்தியாலய அணியினை தேசிய போட்டியில் திறப்பட செயற்பட்டு வெற்றியினை பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக்தினால் நேற்று பாராட்டு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் கரப்பந்தாட்டத்திற்கான உபகரணங்கள் சிலவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
எஸ்.குணபாலன், நிர்வாக உத்தியோகத்தர் சு.விக்னேஸ்வரன், முல்லை
வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் உ.சுரேஸ்குமார், மாவட்ட விளையாட்டு
உத்தியோகத்தர் திரு.ந.முகுந்தன், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்
இ.சகிதரசீலன், வற்றாப்பளை மகாவித்தியாலய அதிபர், கரப்பந்தாட்ட பயிற்றுனர்,
பொறுப்பாசிரியர், வீராங்கனைகள், பொற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.