நிலமிழந்தால் பலமிழந்துபோவோம்! தமிழ்க் கிராமம் குறித்து கந்தையா பாஸ்கரன் உருக்கம்
பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் இருப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அங்குள்ள எஞ்சியிருக்கும் தமிழ்க் கிராமங்களைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் எனத் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பெருந்துயரம்
பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் இருப்பு குறைந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று, அங்கு வாழும் குழந்தைகள் மற்றும் மக்களைச் சந்திக்கக் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற சிரிப்புக்குப் பின்னால் சொல்லில் அடங்காத பெருந்துயரம் மறைந்திருப்பதைத் தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய்க் கொண்டிருக்கும் எல்லைக் கிராமங்களைத் தேடிச் சென்று, அங்கு வாழும் மக்களைச் சந்தித்து அவர்களின் கதைகளையும் வலிகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது ஒரு சிலரின் பொறுப்பு மாத்திரமல்ல என்றும், ஒவ்வொருவருக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர்,
“நிலமிழந்தால் பலமிழந்துபோவோம்” எனக் குறிப்பிட்டு, எஞ்சியிருக்கும் தமது மண்ணையும் மக்களையும் இருப்பையும் பாதுகாக்க இயன்றவரை அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan