21ஐ குழப்பும் பசிலின் ஆதரவாளர்கள்! எதிர் கருத்தில் கோட்டா!
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக,நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் தமது வலுவான கருத்துக்களை வெளியிட்டனர்.
அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த கருத்துக்களை அவர்கள் வெளியிட்டனர்.
பொருளாதாரப் பிரச்சினை முக்கியம்
அரசியலமைப்பு மாற்றங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைக் காட்டிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும் 21வது திருத்தம் அரசியலமைப்பில் இணைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதன்போது வலியுறுத்தினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு சாதகமாக கருத்துரைத்தார்.
பசிலின் ஆதரவாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிந்தக மாயதுன்ன, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா உட்பட்ட பசிலின் ஆதரவாளர்களே,21க்கு எதிராக கருத்துரைத்தவர்களாவர்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பலர் இது மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு 21வது திருத்தம் சட்டமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இத்தகைய அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ஆதரவாக பொதுக் கருத்து உள்ளது என்றும் அது மதிக்கப்பட வேண்டும் என்றும் லன்சா குறிப்பிட்டார்.
பசிலின் எதிர்ப்புக்கு காரணம்
21வது திருத்ததில் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்களுக்கு நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற சரத்தே பசிலின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.



