நாட்டில் மூன்று மாத காலத்திற்கு போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில்
நாட்டில் மூன்று மாத காலத்திற்கு போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் எவ்வாறு பொருட்கள் விநியோகம் செய்கின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடையாது.
எனினும், சுங்கப் பிரிவு மற்றும் மொத்த வியாபாரிகள் என்போரின் தகவல்களின் பிரகாரம் நாட்டில் மூன்று மாத காலத்திற்கு போதியளவு அத்தியாவசிய பொருட்கள் உண்டு.
பொருட்களை விற்பனை செய்யாத மற்றும் பொருள் விற்பனைக்கு நிபந்தனை விதிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
