நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த: பசில் புகழாரம்
இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் விஷேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும்.நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பொதுஜன பெரமுன வெற்றி
இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச எமக்கு கற்பித்த மாபெரும் பாடத்தை மிக ஒழுக்கத்துடன் எடுத்துக்கொண்டு எமது கட்சியை முன்மாதிரியான கட்சியாக கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம்.
நாம் கோழைகள் என்று நினைக்காதீர்கள். வீதியில் ஓடும் நாயின் மீது கல்லை எறிந்தால் நாய் குரைத்து விட்டு வேகமாக ஓடும். ஆனால் சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால் யார் கல்லை எறிந்தார்கள் என்று பார்க்கும். நாமும் அப்படித்தான்.
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
