தனியார் ஜெட் விமானத்தில் முக்கியஸ்தரொருவர் நாட்டை விட்டு வெளியேறிய செய்தி! உறுதிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய விடயம்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் அவர் இலங்கையிலேயே இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இயக்குனர் செஹான் சுமனசேகர ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களில் எந்தவொரு விமான நிலையத்தின் ஊடாகவும் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறவில்லை என செஹான் சுமனசேகர தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் பசில் அமெரிக்காவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
பரபரப்பான நிலையில் இலங்கையில் இருந்து இன்று விமானம் மூலம் சென்ற முக்கியஸ்தர்





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
