நாடாளுமன்றம் வருவது குறித்து பசிலின் நிலைப்பாடு?
குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்றம் வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பசில் ராஜபக்ச தனது முடிவை எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்
ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும், அவர் இதுவரை அந்த கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்கதக்து.