நாட்டை கைப்பற்ற பசில் போடும் திட்டம்! - கோட்டாபயவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று சற்று செயலற்ற நிலையில் செயற்படுகின்றார். இந்நிலையில், நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணித்துள்ளதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூலோபாயத்தின்படி இலங்கையை வழிநடத்துவது குறித்து பசில் ராஜபக்ச இன்னமும் சிந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.