வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில் - வைரலாகும் புகைப்படம் (Photo)
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் முழு அமைச்சரவையும் பதவி விலகியது.
குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முன்னாள் நிதி அமைச்சராக பசில் ராஜபக்சவே காரணம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர் குறித்த எந்த தகவல்களும் அண்மைய நாட்களாக வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, இன்றைய தினம் பசில் ராஜபக்சவிற்க கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது பசில் ராஜபக்ச தொடர்பிலான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பசில் ராஜபக்ச சக்கர நாட்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
