நாடு திரும்பிய பசிலின் அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்த பசில் இன்றைய தினம் (5.3.2024) நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய அவர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி பிளவுகள்
பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வழமையானவை எனவும் அரசியல் இது சகஜமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை

தேர்தலில் தோல்வியடைந்த போது நாட்டை விட்டு செல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிகளை தாம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam