பெருந்தொகை பணப் பரிமாற்றம்! - சீனாவிடம் அமைச்சர் பசில் விடுத்துள்ள கோரிக்கை
தற்போதைய நிலையை சமாளிக்கும் நடவடிக்கையாக இலங்கை மற்றும் சீன மத்திய வங்கிகளுக்கிடையேயான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்றத்தை ஆராயுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
சீன குடியரசின் சபாநாயகர் லி ஜான்ஷுவிடம் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இருநாட்டு நாடாளுமன்ற உயர் தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கை-சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சீன சந்தையில் ஆடைகள், தேயிலை மற்றும் இரத்தினங்கள் போன்ற தொழில்களின் விரிவாக்கத்தை எளிதாக்குமாறு அவர் சீனாவிடம் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகாமையில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார். இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட ஏனைய முதலீடுகளுக்கு சீனா முதலீட்டு வசதிகளை வழங்கும் என்று ஜான்ஷு உறுதியளித்தார்.
இலங்கை சீனாவின் நெருங்கிய நண்பராக இருப்பதால், இலங்கை பொருளாதாரத்திற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும், இந்த விவாதத்தை மேலும் முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam