பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு பசில் மீண்டும் வலியுறுத்து
பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பசில் ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுஜன முன்னணியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதனை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அறிவுறுத்தல்

எனினும் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்நோக்க ஆயத்தமாகுமாறு பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan