வேட்பாளர்கள் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல் : இன்று ரணிலுடன் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மே பேரணி
மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
கட்சியின் மே பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ , போராட்டத்தின் பின்னர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு கூட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் வழிசெய்தார் என குறிப்பிட்டுள்ளார்.
பசில் - ரணில் சந்திப்பு
இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் .ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
