கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா செல்லும் பசில்!
கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் பசில் ராஜபக்சே இந்தியாவிற்க மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.
டிசம்பரில் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்த நிலையில், "இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலர் உதவியைப் பெற முடிந்தது எனவும், இதனால் பல பயனுள்ள விடயங்கள் நடைபெற்றதாகவும் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் தலையீடு மிகவும் சாதகமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்தியாவுடன் எமது பொருளாதாரத்தை நெருக்கமாக ஒருங்கிணைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எமது சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள்" என்று அமைச்சர் கூறினார்.
உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு பசில் ராஜபக்சேவின் அடுத்த பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
