பசில் அமைச்சராக பதவியேற்பு! வவுனியாவில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்
பசில் ராஜபக்ச நிதி அமைச்சராகப் பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று வெடி கொளுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திரியப்பிரமாணம் செய்து கொண்ட பசில் ராஜபக்ச இலங்கையின் புதிய நிதியமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (08.07) காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்சவை வரவேற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், வெடி கொளுத்தி அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஆதரவாளர்கள், பொதுஜன ரெமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




