தீர்மானம் இனி ரணிலின் கையில்: பசில் ராஜபக்ச விளக்கம்
தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) தெரிவித்துவிட்டேன். அவரே இனி தீர்மானிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது எனவும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுக்கிடையில் இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க விடுத்துள்ள அறிவிப்பு மொட்டுக் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசிலின் கோரிக்கை
இந்நிலையில், மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் பசில் ராஜபக்சவைச் சென்று சந்தித்து, இது தொடர்பில் வினவிய போது,
"எனக்கு அது பற்றி தெரியாது. சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன்.
இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது" என பசில் ராஜபக்ச, பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
