ரணிலை சந்தித்த பசில்: சாதகமான தீர்வுக்கு கோரிக்கை
பிற்போடப்பட்டுள்ள உள்ளூரட்சி மன்றத் தேர்தலை நடத்மாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுன சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் பாரிய சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதகமான தீர்வு
பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாகவும், தேர்தல் தாமதமானதால் அக்குழுவிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ச இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த வேட்பாளர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தமது கடமைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சாதகமான தீர்வொன்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |