வெளிநாட்டு தூதுவர்களுடன் பசில் கொழும்பில் சந்திப்பு!
புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச கொழும்பை தளமாகக் கொண்ட பல வெளிநாட்டு தூதர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதில் இலங்கையின் அனைத்து சர்வதேச நட்பு நாடுகளுடனும் நெருக்கமாக ஒத்துழைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
அத்துடன், இது வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன், இலங்கையர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் கொண்டுவரும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களை பசில் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடிதத்தை ஒப்படைத்ததாக டுவீட் செய்துள்ளார்.