விரைவில் நாட்டை கைப்பற்றப்போகும் மகிந்தவின் சகோதரர்! வெளிவந்துள்ள தகவல்
பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதன் விளைவாக நாடு தற்போது வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், துடுகெமுனுவின் தம்பியான பசில் விரைவில் நாட்டை கைப்பற்றுவார் எனவும் இலங்கை செய்தியாளர் சபையின் தலைவர் கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பசில் ராஜபக்சவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்க இணங்கியிருந்த வேளையில் அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை நாட்டை திவாலாக்கியது.
துடுகெமுனு மன்னருக்கு நிகரான தலைவர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச.
இலங்கையில் உள்ள தற்போதைய தலைவர்களில் நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புத்திசாலித் தலைவர் பசில் ராஜபக்ச. எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவர் வருவார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
