கடன் வசதிக்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர்
இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று அங்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
நேற்று இரவு அவர் இலங்கையில் இருந்து இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை சென்றடைந்தார்
இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரச அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தாராமனையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதன்போது இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் வசதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேசப்படவுள்ளது.
இதேவேளை இந்திய பயணத்தின்போது, திருகோணமலையின் எரிபொருள் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பில் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜேவியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        