பசில் பொருளாதாரத்தை மீட்டு எடுத்தால் மகிழ்ச்சி – விமல் வீரவன்ச
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுத்தால் மகிழ்ச்சி என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியாக இருப்பதுவும் ஒரு வகையிலான குரல் வெளிப்படுத்துகையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பசில் ராஜபக்சவோ அல்லது வேறும் ஒருவரே நாடாளுமன்றம் பிரவேசிப்பதனை எதிர்த்து நாம் பேசவில்லை.
20ம் திருத்தச் சட்டத்தின் போது இரட்டைக் குடியுரிமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றே நாம் கோரியிருந்தோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.
கேள்வி : பசில் ராஜபக்சவிற்கு நிதி அமைச்சுப் பொறுப்பு வழங்கியதை உங்களது கட்சி விரும்புகின்றதா?
விமல்: நாம் கட்டியெழுப்பியுள்ள அரசாங்கத்தில் பசில் ராஜபக்வோ அல்லது வேறும் ஓர் தரப்பினரோ பங்குதாரர்களாவர். இந்த தரப்புக்களில் எவருக்கேனும் எந்தவொரு பதவியையும் வழங்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. அந்த உரிமையை எம்மால் நிராகரிக்க முடியாது.
கேள்வி: வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்திற்கு உயிர்ப்பூட்டுவதற்கு பசில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார் என நீங்கள் கருதுகின்றீர்களா?
விமல்: பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள முடிந்தால் அது முக்கியமானது. பொருளாதார சவால்களை பசில் ராஜபக்சவினால் வெற்றிகொள்ள முடியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. இந்த சவாலை வெற்றிகொள்ள முடிந்தால் அது முக்கியமானது.