மொட்டுக்கட்சிக்குள் பிளவு: ரணிலை சந்திக்க அவசரமாக நாடு திரும்பிய பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ச, சுமார் இரண்டு மாதங்கள் பிறகு இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பசில் அவசரமாக நாடு திரும்பியதாகவும் அவசர அவசரமாக ரணிலை சந்திக்கவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பசிலுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அவரை வரவேற்க பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |