பொலிஸார் நீதிமன்ற உத்தரவை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்:வீதித் தடைக்கு அருகில் பொலிஸாருடன் வாதிட்ட சட்டத்தரணி

Sri Lanka Police Galle Face Protest Sri Lankan protests
By Steephen Apr 24, 2022 09:39 AM GMT
Report

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பல்லைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்த பொலிஸார், நீதிமன்றத்தில் பீ. அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

எனினும் நீதிமன்றம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாணவ தலைவர்களுக்கு நுழைவதற்கே தடை வழங்கியுள்ளது.

ஆனால், பொலிஸார் காலிமுகத் திடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு உட்பட அத்தியவசிய தேவையை வழங்கி வரும் தரப்பினரையும் உள்ளே நுழைய விடாது தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவருடன் நீதிமன்ற உத்தரவு தொடர்பான வாதத்தை முன்வைத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பல்லைக்கழக மாணவர்களை தவிர ஏனையோர் செல்ல அனுமதியுங்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பொலிஸ் அதிகாரி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஏனையோர் வர அனுமதியுண்டு, ஊர்வலமாக வருவோருக்கு அனுமதியில் எனக் கூறியுள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி, இங்கு வருவோர் அனைவரும் ஊர்வலத்தில் வருபவர்கள் அல்ல, உணவு கொடுப்போர் வருகின்றனர், தண்ணீர் கொடுப்போர் வருகின்றனர்.

இதனால், அனைவரும் ஆர்ப்பாட்டகார்கள் அல்ல. அங்கு இருப்பவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அல்ல. நீதிமன்றம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு மாத்திரமே உத்தரவை வழங்கியுள்ளது.

நான் அங்கு முன்னிலையான சட்டத்தரணி, விடயங்களை எடுத்துரைத்தேன். அப்போது ஏனையோருக்கு இந்த உத்தரவு பொருந்தாது என நீதவான் தெளிவாக கூறினார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி - உத்தரவுக்கு எதிராக நீங்கள் நாளை நீதிமன்றத்திற்கு சென்று மனுவை தாக்கல் செய்யுங்கள்.

சட்டத்தரணி- கட்டாயம் நாங்கள் தாக்கல் செய்வோம்.ஆனால், இன்று மக்களுக்கு இந்த இடத்தில் தொந்தரவு செய்ய இடமளிக்க முடியாது.

பொலிஸ் அதிகாரி - இந்த வீதி பகுதி மட்டுமே மூடப்பட்டுள்ளது, நீங்கள் வேறு வழியில் இங்கு வரலாம்.

சட்டத்தரணி - நான் எந்த வழியிலாவது வருகிறேன். நான் தவறையே சுட்டிக்காட்டுகிறேன். தடைகளை திறந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை தவிர ஏனையோரை வர அனுமதியுங்கள்.

பொலிஸ் அதிகாரி - இந்த வீதி மாத்திரமே மூடப்பட்டுள்ள காலி வீதியில் வழியாக நீங்கள் உணவு உட்பட எதனையும் கொண்டு வர முடியும்.

அங்கு கூடியிருந்தவர்கள் - இல்லை அந்த பகுதிகளிலும் வீதி மூடப்பட்டுள்ளது. பொய்க் கூற வேண்டாம் வீதி மூடப்பட்டுள்ளது. வாருங்கள் நான் உங்களுக்கு காட்டுகிறேன். காலி வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி - இல்லை, இல்லை மூடப்படவில்லை. பொய் சொல்ல வேண்டாம்.

அங்கு கூடியிருந்தவர்கள் - பொய் அல்ல, நாங்கள் அந்த வழியாக வரும் போது பொலிஸார் தடுத்தனர்.

சட்டத்தரணி - பொலிஸார் நீங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கின்றீர்கள். நீதிமன்ற உத்தரவுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கின்றீர்கள். அப்படியானால், ஊடகங்களிடம் கூறுங்கள், நாங்கள் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்வோம். இது அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்திற்கு மாத்திரமான உத்தரவு, ஏனையோரை வர அனுமதியுங்கள்.

அப்படி அவர அனுமதிக்காவிட்டால், காரணத்தை ஊடகங்களிடம் கூறுங்கள். அவ்வளவுதான், அடுத்ததை நாங்கள் நாளை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்.

நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் என்ற வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றின் 16 பேருக்கும் மாணவர்களுக்குமே உததரவு வழங்கப்பட்டது ஏனையோருக்கு எதிராக அல்ல. நீங்கள் ஏனையோரையும் தடுப்பீர்கள் என்றால், நாங்கள் நாளைய தினம் அதனை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்.

அப்படியில்லை என்றால் அனைவரையும் தடுப்போம் என்பதை தெளிவாக கூறுங்கள். அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வருவதால், பிரச்சினை ஏற்படும் என புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை அளித்தனர், இதனால், அவர்களுக்கு மாத்திரமே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

நீங்கள், அந்த நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவீர்கள் என்றால், தெளிவாக அதனை கூறுங்கள். நீதிமன்ற உத்தரவை தவறாக அர்த்தப்படுத்தினால், நீங்களே பாதிக்கப்படுவீர்கள்.

பொலிஸ் அதிகாரி - எனக்கு சட்டத்தை பற்றி 34 வருட அனுபவம் உள்ளது.

சட்டத்தரணி - நீங்கள் நீதிமன்றத்தில் இருந்தீர்களா

பொலிஸ் அதிகாரி - நான் நீதிமன்றத்தில் இருக்கவில்லை. நான் உத்தரவுக்கு அமைய செயற்படுகிறேன்.

சட்டத்தரணி - நான் நீதிமன்றத்தில் இருந்தேன், இருந்தவன் என்பதால் கூறுகிறேன். நீதிமன்றத்தில் இருந்த அதிகாரி நெவிலை வர சொல்லுங்கள். நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கவில்லை. நீங்களே நாளைக்கு பதிலளிக்க வேண்டும்.


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US