யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரி தாக்குதல்!
யாழில் தனது பணிகளை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த ஊடகவியலாளர் மீது அடையாளம் தெரியாத இருவரால் சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(12.10.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தலைக்கவசத்தினால் தாக்குதல்
யாழில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றில் கடமை புரியும் ஊழியர், நேற்று மாலை வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தவேளை கஸ்தூரியார் வீதியில் வைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தலைக்கவசத்தினால் குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri