அரசாங்கத்தை பாராட்டிய பாரத் அருள்சாமி
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்கான அரச நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இந்த திட்டத்தின் படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூபா 200 சம்பள உயர்வு மற்றும் ரூபா 200 வருகை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால், தற்போது ரூபா 1350ஆக வழங்கப்படும் நாள் சம்பளம் ரூபா 1750ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
நேரடி பாராட்டு
இது வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக உயர்ந்துள்ளது. எந்த தொழிற்சங்க அழுத்தமும் அரசியல் பேதங்களும் இல்லாமல், பொறுப்பான பேச்சுவார்த்தை மற்றும் நேர்மையான அணுகுமுறையின் மூலம் இது எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு செலவு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும் பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார்.
தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இந்த முயற்சியை பாராட்டியுள்ளனர்.
பெரும் வரவேற்பு
வரவு செலவு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும் பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார்.

தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இந்த முயற்சியை பாராட்டினர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல தசாப்தங்களாக நீடித்த கட்டுப்பாட்டு வேலை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் எங்கள் குரலுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. தொழிலாளர்களை எதிர்காலத்தில் தேயிலை பங்குதார்களாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் திட்டம் தான் நிலையான தீர்வாகும் - என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |