கமலா ஹரிஸிற்கு ஆதரவை வெளியிட்ட ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸிற்கு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு வழங்கியுள்ளார்.
பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ் அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அனேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
பில் கிளின்டன் ஹிலரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
I’m so proud of my girl, Kamala. Barack and I are so excited to endorse her as the Democratic nominee because of her positivity, sense of humor, and ability to bring light and hope to people all across the country. We’ve got your back, @KamalaHarris! pic.twitter.com/xldcZeDXuS
— Michelle Obama (@MichelleObama) July 26, 2024
கமலா ஹரிஸ் - பராக் ஒபாமா
தனது மனைவியுடன் இணைந்து கமலா ஹரிஸினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் குறித்த காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
“இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகமானது என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்”. என இருவருக்கும் கமலா ஹரிஸ் பராக் ஒபாமாவின் அழைப்புக்கு பதில் வழங்கியுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |