மதுபானசாலை அனுமதி பெற்றவர்கள் விபரம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்கள் பக்கம் இருப்பதாக கூறும் அநுரகுமார திஸாநாயக்க இன்னமும் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடாமல் வைத்துள்ளார்.
அனுமதி பத்திரங்கள்
தேர்தலுக்கு பின்னர் தான் மதுபானசாலை அனுமதிப்பத்திம் பெற்றவர்களின் பட்டியல் வெளிவருமோ தெரியவில்லை. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது புலனாகிறது.
சிலரிடம் இருக்கிறது. சிலரிடம் இல்லை என்று சொல்லி கொள்கின்றார்கள். சிலர் வேறு பெயர்களில் மாற்றி வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ விடயங்கள் நடந்தேறி விட்டன. பணப்பரிமாற்றங்களும் நடந்து முடிந்து விட்டன.
தேர்தலுக்கு பின்னர் அநுரகுமார திஸாநாயக்க பெயர் விபரங்களை வெளியிடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு என எங்கும் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதாக இருந்தால் உண்மையை வெளியிடுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
