சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு:ஸ்தம்பிக்குமா நீதிமன்ற நடவடிக்கைகள்
சட்டத்தரணிகள் நாளைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகுரேகொடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய அவசரக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சட்டத் துறையில் பணியாற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்த தீவிர அச்சம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகுரேகொடா பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டத்துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இ
ந்த போராட்ட நடவடிக்கை, உயிரிழந்த சட்டத்தரணிக்கு அஞ்சலி செலுத்துவதோடு, சட்டத் துறையினரின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்திலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam